எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 14, 2014

குழந்தைங்கல்லாம் வந்து சமத்தா பதில் சொல்லுங்க! :)

//1. சின்ன வயதில் கண்ட Fantasy கனவு?//

சின்னவயசில் கண்ட கனவெல்லாம் நினைப்பில் இல்லை. ஆனால் கணக்கு டீச்சரோடு எனக்கு ஏழாம் பொருத்தம். அவங்க என்னைப் பாராட்டறாப்போல் ஒருமுறை கனவு கண்டிருக்கேன். கண் விழித்ததும், ஙே! என்னைப் பொறுத்தவரைக்கும் அதான் சிறந்த கற்பனை!


2. பள்ளிக்கு செல்லும் வழியில் அனுபவித்த மறக்க முடியாத விஷயம்?


வைகை கீழ்ப்பாலம், (கல்பாலம் என்பார்கள்) வழியாத் தான் நடந்து போனால் போவது. பேருந்தில் போனால் சிம்மக்கல், யானைக்கல் கடந்து மேல்பாலம் வழியாப் போவது. அப்போ ஒரு முறை வைகையில் வெள்ளம் வந்து பார்த்தது தான். அன்னிக்கு ஸ்கூல் முதல் இரு வகுப்புகளோடு விடுமுறை கொடுத்துட்டாங்க. வெள்ளையாய், நுரையாய்ப் பெருகி வந்த வெள்ளத்தை அப்போது தான் முதன்முதலில் பார்த்தேன்.


3. மறக்க முடியாத புத்தகம்? ஏன்?


குழந்தைகள் பத்திரிகையான கண்ணனில் வந்த அனைத்துக் கதைகளுமே பிடித்தது. என்றாலும் குழந்தைகளுக்காக எழுதாவிட்டாலும் குழந்தைகளும் விரும்பிப் படிக்கும் துப்பறியும் சாம்பு தான் மறக்க முடியாத புத்தகம். சாம்புவை ரசிக்காதோர் உண்டா! நாவல் என்றால் கல்கியின் அமரதாரா தான்.


4. மறக்க முடியாத மழை நினைவு?


நிறைய மழையில் நனைஞ்சிருந்தாலும் தீபாவளிக்கு அப்புறம் பள்ளி திறந்து வகுப்புக்குப் போறச்சே எல்லோரும் புது உடை உடுத்திக் கொண்டு செல்வோம். பதினோராம் வகுப்புப் படிக்கையில் அன்று மழை வரும் என்ற எச்சரிக்கை இருந்தும் புதுசு போட்டுக் கொண்டு போய் சொட்டச் சொட்ட நனைந்து அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டேன்.


5. எந்த விளையாட்டில் கெத்தாக விளங்கினீர்கள்?


ஓடியாடி விளையாடும் விளையாட்டென்றால் பாண்டி ஆட்டம். கல்லா, மண்ணா! உட்கார்ந்து விளையாடுவதில் ட்ரேட், சீட்டு ஆட்டத்தில் செட் சேர்ப்பது.


6. பால்யத்திற்கு திரும்பினால் எதை மாற்ற விரும்புவீர்கள்?


குறிப்பா எதுவும் இல்லைனாலும் எனக்குக் கணக்கு மட்டும் நல்லாப் போடத் தெரிஞ்சிருக்கணும்னு வேண்டிப்பேன். கணக்கிலே 75 மார்க் தான் என் அதிகபட்ச மார்க். அதுவும் பொதுக்கணக்குத் தான். அல்ஜீப்ராவோ, ஜியோமிதியோ படிச்சதில்லை. செக்ரடேரியல் கோர்ஸ் படிச்சதாலே கணக்கிலே அல்ஜீப்ரா, ஜியோமிதியும், தமிழிலே இலக்கணமும் கிடையாது. இது இரண்டையும் படிக்க முடியாமல் போனதைப் பெரிய இழப்பாகக் கருதுவதால் இவற்றைக் கற்கும் வாய்ப்பை வேண்டுகிறேன்.


உமாநாத் செல்வன்

நம்ம நீண்ட கால நண்பர், குழந்தை எழுத்தாளர், அதன் மூலம் தன்னையும் குழந்தையாய் நினைப்பவர், நம்மையும் குழந்தையாய் நினைப்பவர் கேட்டிருந்த கேள்விகளுக்கு நான் கொடுத்த பதில்.  இது ஒரு தொடர் பதிவு.  யார் வேண்டுமானாலும் தொடரலாம். அவரவர் விருப்பம். 

12 comments:

  1. 1. மறைந்த என்னுடைய தாத்தா என் கனவில் வந்து காலில் அடிபட்டு, குழியாய் இருந்த இடத்தைத் தன் கையால் தொடுகிறார். குழி, அல்லது அந்தக் காயம் மறைந்து விடுகிறது!

    2. புளியங்காய், புளியம்பழம். புத்தகப் பையில் சேகரித்து வகுப்பில் சுவைப்பது!

    3. பாடப் புத்தகங்கள். இப்போது நினைத்தாலும் டெரராக தூக்கம் வர மாட்டேன் என்கிறது!

    4. எல்லா மழைச் சந்தர்ப்பங்களும் மறக்க முடியாதவை. மழைக்கு முன் இருட்டியிருக்கும் வானம் தரும் சூழல் மிகப் பிடித்த ஒன்று. சற்றே உரக்கப் பாடிக்கொண்டே ஆளில்லாத் தெருக்களில் சைக்கிளில் பறப்பேன்!

    5. எல்லோரும் விளையாடும்போது கைதட்டும் ஆடியன்ஸ் விளையாட்டில் நான் கெத்து. :))))

    6. மாற்ற நினைத்தாலும் எதையும் மாற்ற முடியாமல் அப்படியே ரீவைண்ட் ஆகும் என்பதால் எதுவும் இல்லை! Fate!

    ReplyDelete
  2. ஹை!.. நல்ல தொடர் ஓட்டம்!.. நானும் தொடர்கிறேன் அம்மா!..

    ReplyDelete
  3. இந்த ஆட்டத்துக்கு நான் இல்லை. (குழந்தைங்க எல்லாம் சமத்தாபதில் சொல்லணும் )

    ReplyDelete
  4. சுவையாக உங்களின் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி! இது முகநூலில் தொடர் பதிவாக நேற்று கருணாகரன் தொடங்கிவைத்தார் இங்கும் நீங்கள் தொடர்ந்துவிட்டீர்கள் போல! கலக்குங்கள்! நன்றி!

    ReplyDelete
  5. எல்லாக்கேள்விகளுக்கும் சமத்தாக பதில் சொன்ன ஶ்ரீராமுக்கு நன்றி. :)

    ReplyDelete
  6. வாங்க பார்வதி, பதில் சொல்லிட்டுச் சுட்டி கொடுங்க. இல்லைனா படிக்க மறந்துடுவேன்.

    ReplyDelete
  7. ஜிஎம்பி சார், எல்லோருமே குழந்தைங்க தானே! :))

    ReplyDelete
  8. வாங்க சுரேஷ், இதை உமாநாத் செல்வன் என்னும் விழியன் ஆரம்பித்து வைத்தார். அவருடைய கேள்விகளுக்கே கருணாகரன் என்பவர் பதில் சொல்லி இருக்கணும். :)))

    ReplyDelete
  9. இதோ இதோ சுட்டி இந்தாங்க!...

    http://kuviyalgal.blogspot.com/2014/11/childrens-day-special.html#more

    ReplyDelete
  10. பத்து நாள் விடுமுறையில் சென்று விட்டுப் பார்த்தால் தொடர் ஓட்டம் ஒன்று ஆரம்பித்திருக்கிறதே !

    ReplyDelete
  11. முகநூலில் படித்தேன் உங்கள் பதில்களை. பதில்கள் நன்றாக இருக்கிறது.

    குழந்தை பருவத்தில் மழையில் நனைய பிடிக்கும்.
    பாடங்கள் படிக்காமல் விளையாடபிடிக்கும்.

    மழையில் நனைந்து வந்தால் ஏன் எங்காவது நின்று விட்டு மழை நின்றபின் வந்தால் என்ன்? என்று திட்டு விழும் அம்மாவிடமிருந்து.

    ReplyDelete
  12. வெகுநாட்கள் கழித்து கீதாவின் படிப்பாஇப் படிப்பதில் மகிழ்ச்சி.இப்படி ஒரு கேள்விபதில் ஓடுகிறதா. கணக்கு எல்லோருக்கும் சிம்ம சொப்பனம்தான்.அதுவும் தம்பிகள் தேறி 100 எடுப்பதைப் பார்த்துவிட்டு எனக்கு 72 மார்க் கிடைத்தது இன்னும் வருத்தமே. வைகையில் வெள்ளமா. எத்தனை நல்ல நிகழ்ச்சி.கரைகளில் கூடச் சிலவீடுகளில் புகுந்தது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete