எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 26, 2015

நாகர்கோயிலில் !

இங்கே

முதல்நடைமேடையில் நின்று கொண்டிருந்த வண்டி திருவனந்தபுரம்--நாகர்கோயில் இடையே மட்டும் செல்லும் வண்டி. கூட்டமெல்லாம் இல்லை. ஆனால் டிக்கெட் எடுக்காததாலும், சாமான்களை எடுக்க வேண்டும் என்பதாலும் எங்களால் அதில் ஏற முடியவில்லை. அடுத்து எப்போ வண்டினு விசாரணையில் கேட்டதற்குப் பனிரண்டே முக்காலுக்கு பெங்களூரில் இருந்து வரும் என்றார்கள். சரினு டிக்கெட்டும் வாங்கிக் கொண்டு, சாமான்களையும் க்ளோக் ரூமில் இருந்து எடுத்துக் கொண்டு முதலாம் நடைமேடையிலேயே உட்கார்ந்தோம். வடமாநிலங்களில் இம்மாதிரிப் பெரிய பெரிய ஸ்டேஷன்களாக இருந்தாலும் கூட அங்கே அமரும் வசதியோடு கூடிய இடங்களே காணப்படாது. நின்று கொண்டு தான் இருக்க வேண்டும். உட்கார வேண்டும் எனில் பயணிகள் தங்கும் அறைக்குச் சென்று அமர வேண்டும். ஆனால் நம் தென் மாநிலங்களில் உட்காருவதற்கு வசதிகள் இருக்கின்றன.

ரயில்வே அறிவிப்புச் செய்பவர்கள் அப்போது 5 ஆம் நடைமேடைக்கு பெங்களூர் செல்லும் வண்டி வருவதாக அறிவித்திருக்கிறார். சரியாகக் கவனிக்காமல் நாங்கள் செல்ல வேண்டிய வண்டி அதுதான் என நினைத்துவிட்டோம்.  ஒரு கூலியாளை அழைத்து சாமான்களை எடுத்துக் கொண்டு அங்கே கொண்டு விடும்படி சொல்ல, அவர் எந்தப் பெட்டி என்று கேட்க, நாங்கள் நாகர்கோயில் போகணும்னு சொல்ல, அவர் அந்த வண்டி நாகர்கோயிலில் இருந்து பெண்களூர் செல்வதாகவும், நாங்கள் செல்ல வேண்டிய வண்டி முதலாம் நடைமேடைக்கே வரும் என்றும் சொன்னவர், எதற்கும் தான் போய்ப் பார்த்து வருவதாகவும், அப்படி ஐந்தாம் நடைமேடை தான் என்றால் சாமான்களைத் தூக்கி வருவதாகவும் சொல்லிச் சென்றார். பத்து , இருபது நிமிடத்தில் திரும்பி வந்தவர் எங்களை அங்கேயே அமரச் சொல்லிவிட்டு வண்டி இங்கே தான் வரும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றார். சந்தேகத்துக்கு அங்கே பக்கத்தில் இருந்த போலீஸ் பூத்திலேயும் கேட்டுக் கொண்டோம். பின்னர் வண்டி வந்ததும் ஏறிக் கொண்டோம். வண்டியே காலி தான். நாகர்கோயில் செல்லும் பயணிகள், கன்யாகுமரி செல்லும் பயணிகள் எனக் கொஞ்சம் பேரே இருந்தனர்.

வண்டி செல்லும் வழியெங்கும் அழகான இயற்கைக் காட்சிகள். பெட்டியைப் பூட்டிக் காமிராவை உள்ளே வைத்திருந்ததால் எடுக்க முடியலை.  ஒரு சில காட்சிகளை மட்டும் எடுக்க முடிந்தது.






மேகங்கள் மூடிக் கிடக்கும்  காட்சி


நாகர்கோயிலுக்கு ஒன்றரை மணி நேரத்தில் வந்து விட்டோம். எங்களுக்குத் திருவனந்தபுரம் செல்லும்போது பழக்கம் ஆயிருந்த ரயில்வே ஊழியர் நாகர் கோயிலில் மீனாக்ஷிபுரத்தில் தங்கும்படி அறிவுறுத்தி இருந்தார். பேருந்து நிலையமும் அருகில் என்றும், சாப்பாடு வசதிகளும் அங்கே அதிகம் என்றும் சொல்லிச் சில ஹோட்டல்கள் பெயரையும் கொடுத்திருந்தார். நாகர்கோயில் ரயில்வே நிலையத்தில் நாங்கள் பார்த்த ஆட்டோக்காரர் எங்களை மீனாக்ஷிபுரம் அழைத்துச் செல்ல 50 ரூ கேட்டார். எவ்வளவுனு தெரியலை. ஆகவே சரினு சொல்லிட்டு உட்கார்ந்தோம். ரயில்வே ஸ்டேஷன் அருகேயே இருக்கும் லாட்ஜில் தங்கறீங்களானு கேட்டார். அந்த இடமே சரியாக இல்லை என்பதால் நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். கடைசியில் வடிவீச்சுவரம் என்னும் பகுதி வழியாக மீனாக்ஷிபுரம் சென்றார் ஆட்டோக்காரர். தெருவெல்லாம் மேடு, பள்ளம், ஒரே குப்பை மயம். சுத்தம் என்பதே மருந்துக்கும் இல்லை.  நான் கற்பனையிலொ கண்டிருந்த நாகர்கோயில் இது அல்ல!  நாங்கள் சென்ற வழியெங்கும் பித்தளைப் பாத்திரக் கடைகள். முதல் முறை நாகர்கோயிலுக்கு எண்பதுகளில் வந்தப்போ இங்கிருந்து விளக்கு வாங்கிச் சென்றோம். அந்த நினைவு வந்து பின்னர் ஒரு முறை வந்து பார்க்கணும்னு நினத்துக் கொண்டு சென்றேன். 

அதற்குள் மீனாக்ஷிபுரத்தில் தளவாய் தெரு என்னும் தெருவில் உள்ள ஓர் லாட்ஜில் கொண்டு விட்டார். ஆட்டோக்காரர். வண்டிகள் நிறுத்தக் கீழே இடமும், கீழேயே ஒரு பக்கமாகச் சில அறைகளும் காணப்பட்டன. மேலே நாலு மாடி இருப்பதாகவும் தெரிந்தது. கீழேயே வரவேற்பு அறை. அங்கே விசாரித்தோம். டபுள் பெட்ரூம் ஏசி வசதியோடு ஆயிரத்து நூறு ரூபாய் என்றார். இதைத் தவிர சூட்(ஸ்வீட்?) இருப்பதாகவும் அது ஆயிரத்து ஐநூறில் இருந்து இருப்பதாகவும் சொன்னார். இரண்டையும் பாருங்க எனச் சொல்லி என்னை மேலே அனுப்பினார். நானும் அங்கே பார்த்துட்டு அறை பிடித்திருந்தால் அங்கேயே இருந்துவிடுவதாகவும், சாமான்களைத் தூக்கிக் கொண்டு பணம் கட்டிட்டு ரங்க்ஸ் மேலே வரட்டும்னு சொல்லிட்டு நல்லவேளையா அங்கே இருந்த லிஃப்டில் ஏறி மேலே சென்றோம். ஊழியர் ஒருத்தர் கூட வந்து அறைகளைக் காட்டினார். ஆயிரத்து நூறு ரூபாய் அறையே விசாலமாகவும், நல்ல காற்றோட்டமாகவும் சுத்தமாகவும் காணப்பட்டது. அறையின் ஓடிஎஸ் பக்கம் ஒரு ஜன்னலும் அது கீழே உள்ள கார்பார்க்கிங் பக்கமாக இருக்கு என்பதால் நல்ல காற்றும் வரும். அதைத் தவிர வராந்தாவைப் பார்த்தபடி ஒரு ஜன்னலும் இரண்டு இருந்தது.

மற்ற வசதிகளும் திருப்தி தர நான் சரினு சொல்லிட்டு அங்கே இருந்தேன். இருபது நிமிடத்தில் ரங்க்ஸ் சாமான்களோடு மேலே வந்தார். ஓட்டல் ஊழியர் சாமான்களைத் தூக்கி வந்து வைத்துவிட்டு ஏதேனும் வேண்டுமா, சாப்பாடு வாங்கி வரவானு கேட்டார். சாப்பிட்டாச்சுனு சொல்லி அப்போ  மணி மூன்று  ஆகிவிட்டதால், காஃபி, டீ கிடைக்குமானு கேட்டோம்.  நாலு மணிக்குத் தான் கிடைக்கும் என்றும் நாலு மணிக்கு வாங்கி வருவதாகவும் சொன்னார். எங்களிடம் ஃப்ளாஸ்க் இருப்பதைச் சொல்லி வந்து வாங்கிப் போகச் சொன்னோம். தொலைக்காட்சியைப் பார்த்தபடி ஓய்வு எடுத்துக் கொண்டோம்.  

19 comments:

  1. தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், நன்றி.

      Delete
  2. நாங்கள் நாகர் கோவில் சென்றிருந்தபோது நண்பர் அதிகாலையில் ரயில் நிலையத்துக்கு வந்து எங்களைக் கூட்டிச் சென்றார். அவர் இல்லத்திலேயே இரண்டு நாட்கள் தங்கி இருந்து . அங்கிருந்து கன்னியாகுமரி, திருச்செந்தூர் திருநெல்வேலி, மண்டைக்காடு சுசீந்திரம் போன்ற இடங்களுக்குப்போய் வந்ததை நினைவூட்டி விட்டது இந்தப் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நாங்க ஏற்கெனவே போயிருக்கோம், குழந்தைகளோடு! இப்போத் திருவனந்தபுரம் செல்லும் வாய்ப்புக் கிடைத்ததால் நாகர்கோயிலை மீண்டும் பார்க்க எண்ணினோம். அங்கே தெரிந்தவர்கள் யாரும் இல்லை. இணைய நண்பர்கள் எல்லாம் தூரத்தில் வசிக்கிறாங்க. நாஞ்சில் கண்ணன் சென்னை/ஹைதராபாத்(?) திலும், சாந்தி மாரியப்பன் என்னும் அமைதிச்சாரல் மும்பையிலும் வசிக்கிறாங்க. அமைதிச் சாரலைக் கேட்டேன், அங்கே இருக்கீங்களானு! அவங்க திரும்ப மும்பை போயிட்டதாச் சொன்னாங்க. :)

      Delete
  3. ஒரே ஒரு முறை நாகர்கோவில் சென்றிருக்கிறேன்.

    நல்லவேளை, எனக்கென்ன காசுதான் வருகிறதே என்று அந்த போர்ட்டர் உங்களை ஐந்தாவது நடைமேடைக்கு அழைத்துச்செல்லாமல் இருந்தாரே....!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஆமாம், விட்டால் எங்களை அங்கேயே கட்டிப் போட்டுடுவார் போல இருந்தது. எனக்குத் தெரிஞ்சு அங்கே நாகர்கோயில் செல்லும் வண்டி வராதுனு நிச்சயமாச் சொல்லிட்டார். :) பொதுவாக மனிதர்கள் நல்லவர்களே! இதைப் பல சமயங்களிலும் உணர்கிறேன். அதுவும் வலுவில் வந்து உதவுவது தென் மாவட்டங்களில் அதிகம். மதுரையில் நாம் ஓர் இடம் போக வழி கேட்டால், கூடவே வந்துடுவாங்க. :)

      Delete
  4. நாகர்கோயில் வழியாகத் திருனெல்வேலி போயிருக்கிறோம்.
    ஊர் பார்த்ததில்லை. அம்மாவுக்கு அந்த ஊர் கோவிலின் மீது நம்பிக்கை ஜாஸ்தி.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் அங்கே நாகரம்மன் கோயிலுக்குப் போகணும்னு தான் தங்கினோம் ரேவதி! :)

      Delete
  5. இந்த முறை எந்தெந்த பித்தளை பாத்திரங்கள் வாங்குனீர்கள் எனும் ஆவலில்...

    ReplyDelete
  6. நாகர் கோயில் போனதில்லை.

    அங்கு நாகர்களுக்குக் கோயில் ஏதும் இருக்கிறதா?

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இருக்கு, ஊமைக்கனவுகள். அங்கே தான் முதலில் சென்றோம்.

      Delete
  7. நாகர்கோவில் - ஒரு சில முறை அந்த வழியே போனதுண்டு. தங்கியதில்லை. நண்பர் ஒருவர் நீண்ட நாட்களாக அழைத்துக் கொண்டிருக்கிறார். போவதற்குத் தான் நேரம் வரவில்லை!

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. போயிட்டு வாங்க. இரண்டு நாட்கள் தங்கி நிதானமா எல்லாத்தையும் பாருங்க! :)

      Delete
  8. Naan ethum sollala paaaaa.....

    ReplyDelete
    Replies
    1. அட, கண்ணன்!!!!!!!!! ஏன்? ஏன் ஒண்ணும் சொல்லலை? :)

      Delete
  9. ஹும்1 பயணம் போறப்ப காமிரா பொட்டிக்கு வெளியே கைலதான் இருக்கணும். பொட்டில வெச்சு பூட்டறதுக்கு எடுத்துண்டு போகாமலே இருக்கலாம். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, தம்பி, நான் மறந்துட்டு அங்கேயே வைச்சுட்டு நான் பாட்டுக்குக் கிளம்புவேன். அதான்! கைலே அலைபேசி இருந்ததே! அதிலே எடுத்திருக்கேனே! :)

      ஒரு கதையே இருக்கு. சென்னை போறச்சே ஃப்ளாஸ்க், மற்ற முக்கிய சாமான்கள் வைச்சிருந்த கைப்பையை என் பொறுப்பில் ரங்க்ஸ் விட்டிருந்தார். நானும் ரயில்லே ஜோரா மாட்டி வைச்சிருந்தேன். இறங்கறச்சே அம்பேல் தான்! ரயிலில் இருந்து இறங்கிக் கொஞ்ச தூரம் வந்தாச்சு! அப்புறமாத் தான் நினைப்பு வந்தது. நல்லவேளையா வண்டி கிளம்பலையே ரங்க்ஸ் அங்கேயே ஏறி உள்ளே போனாரோ இல்லையோ வண்டி ஊதிடுச்சு! ஒரே திகில். இறங்காதீங்க எழும்பூர் போயிடுங்கனு கத்த நினைச்சேன். அதுக்குள்ளே அவர் பையை எடுத்துட்டு மெல்லக் கால் வைச்சு இறங்கிட்டார். உயிரே அப்புறம் தான் வந்தது. அதனால் தான் உள்ளேயே வைச்சுடறேன். :( கைப்பையிலே வைச்சுக்கலாம் தான். அது வெயிட் தாங்காமல் ஒரே அழுகை. இனிமேல் கைப்பையில் தான் வைச்சுக்கணும். :) கைப்பையைக் கீழேயே வைக்க மாட்டேன் என்பதோடு ரங்க்ஸ் கிட்டேக் கூடத் தர மாட்டேன். ரயில் டிக்கெட், வீட்டுச் சாவி, ஐடி கார்டுனு எல்லாமும் அதில் தான் வைப்பேன். ஆகவே கவனம் இருக்கும். :)

      ஒரு கதையே சொல்லிட்டேன். :)

      Delete
  10. சகோதரி இந்த கீதாவை விட்டு விட்டீர்களே! நான் நாகர்கோவில்காரியாக்கும்.....எங்க ஊர் ரொம்ம்ம்ம்ப அழகு....முன்பெல்லாம் குப்பை அவ்வளவாக இருக்காது இப்போது வந்துவிட்டது போலும்...ரோடுகள் அப்படியேதான் இருக்கு போலும்...அது சரி ஏன் மெயின் ரோடு வழி அழைத்துவரவில்லை என்று தெரியவில்லை...ம்ம்ம் ஒரு வேளை ஒன்வேயாகி இருக்கும் கோட்டார் வழி...

    நம் பதிவர் சேட்டைக்காரன் அவர்கள் நாகர்கோவில் காரராக்கும்.....தளவாய் தெரு என்ற நினைவு....

    எங்க ஊருக்குப் போய் வந்தது ஏதோ நானே போனது போல உணர்வு,

    கீதா

    ReplyDelete