எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 01, 2017

இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?

இப்போதைய தலைபோகிற விஷயமாக விவாதிக்கப்படுவது எரிவாயு மானியம் ரத்தாகப் போகிறது என்னும் செய்தியும், ரேஷன் முறையை அடியோடு எடுக்கப் போகிறார்கள் என்பதுமே. உண்மையில் ரேஷன் முறையை எடுத்தால் உணவு தானியங்கள் விலை குறைய வாய்ப்பு உண்டு. ஆனால் அதை யாரும் புரிந்து கொள்வதில்லை. அதிலும் இதுவும் ஏதோ மத்திய அரசு செய்யும் ஒரு சதி என்ற அளவிலேயே பேசுகின்றனர். உண்மையில் ரேஷன் கார்டே இல்லைனு சொன்னதாகத் தெரியலை. வ.கோ.கீழ் உள்ளவர்கள், அதற்குக் கொஞ்சம் மேல் உள்ளவர்கள், எனத் தரம் பிரித்து மத்திய அரசுக்குத் தெரிவிப்பதற்காகப் பட்டியல் தயார் ஆவதாகப் படித்தேன். மத்திய அரசு மானிய விலையில் கொடுக்கும் ரேஷன் பொருட்களை இலவசமாகக் கொடுப்பதற்கான பட்டியலும், பாதி விலை அல்லது குறைந்த விலையில் கொடுப்பதற்கான பட்டியலும் தயார் செய்வதாகச் சொல்கிறார்கள். இது மாமூலான ஒன்றே என்றும் சொல்கின்றனர். இதைக் குறித்து இளைய நண்பர் ராஜசங்கர் விபரங்களை முகநூலில் பகிர்ந்திருக்கிறார்.

ரேஷன் அரிசி க்கான பட முடிவு


எப்படின்னா தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படியும் அந்த்யோதயா அன்ன யோஜனாவின்படியும் அவற்றில் இடம் பெற்றிருக்கும் மக்கள் உணவுப் பொருட்களை ரேஷனில் வாங்கிக் கொள்ள முன்னுரிமை பெற்றவர்கள் ஆவார்கள். அவர்களுக்கென வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கு முறையே 3ரூ, 2ரூ அல்லது 1 ரூ என்னும் விலையில் மானியமாக மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்துக்கும் வழங்குகிறது.  இதைத் தான் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் அவரவர் வசதிக்கேற்ப குறிப்பிட்ட ரேஷன் அட்டைகள் வைத்திருப்போருக்கு இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. இதன் செலவை அந்த அந்த மாநில அரசே ஏற்றுக்கொள்ளும்.

இந்த முன்னுரிமை பெறாத குடும்பங்களுக்கு என உணவு விநியோகம் முக்கியமாக அரிசி விநியோகம் ரூ 7.50 காசு அல்லது 8.30 என்னும் அளவிலே தொடரும். ஆகவே இன்னும் சிலகாலம் முன்னுரிமை பெறாத குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் தடைப்பட வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.  இந்த இரண்டு முறைகளையும் மனதில் கொண்டு ஒவ்வொரு மாநிலத்துக்கும் முன்னுரிமை பெற்ற குறைந்த விலை அரிசி, தானியங்கள் வேண்டுவோர் பட்டியலையும்,  முன்னுரிமை பெறாத ஆனால் ரேஷனில் உணவு தானியங்கள் வாங்குவோருக்குக் கொடுக்க வேண்டியவர்கள் பட்டியலையும் தயாரித்துத் தருமாறு மத்திய அரசு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே தங்களுக்குத் தேவையான உணவு, தானியங்களின் அளவை முன்னுரிமை பெற்றவர்கள், பெறாதவர்கள் என்ற அடிப்படையில் எந்த அளவுக்குத் தேவைப்படும் என்பதற்காகவே இப்போது பட்டியல் தயாராகிறது.  அதோடு இல்லாமல் உணவுத்துறை அமைச்சர் பொது விநியோகத் திட்டம் தொடரும் என்றே அறிவித்துள்ளார்.

மத்திய அரசு இப்படி இரு வேறு நிலைகளில் மானிய விலை உணவு தானியங்களைத் தொடர்ந்து அளித்து வருகிறது. இதைத் தான் மாநில அரசு தன் சுமையாக ஏற்றுக் கொண்டு இலவச அரிசியாக விநியோகம் செய்து வருகிறது. அல்லது இனிமேல் குறைந்த விலையில் முன்னுரிமை பெறாதவர்களுக்கு அரிசியை விற்கலாம்.  இவ்வளவே தான்! இதுக்குப் போய் அலட்டிக்கலாமா? :) எந்த விஷயத்தையும் அதன் முழுமையான பொருளை உள்வாங்கிக் கொள்ளாமல் மேலோட்டமாகப் படித்து விமரிசிப்பதே இப்போது வழக்கமாகி வருகிறது! :(

எரிவாயு மானியம் குறித்து முழு விபரங்களும் கிடைக்கட்டும். பகிரலாம். இப்போதைக்கு ஒண்ணும் தெரியலை! :)

22 comments:

 1. உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். (ஆனால், கொஞ்சம் வறுமையில் இருப்பவர்களை இத்தகைய செயல் பாதிக்கக்கூடாது). இப்போல்லாம் குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கேபிள் கனெக்ஷன், எரிவாயு இல்லாத வீடுகளே பெரும்பாலும் இல்லை. அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதும் நியாயம் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

  இன்னொன்று, அரசு எதற்கு மானியம் வழங்கவேண்டும் (எரிவாயுவுக்கு).

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. நல்லாக் கேட்டீங்களே ஒரு கேள்வி! மானியம் ரத்தில்லை என்றும் அதை முறைப்படுத்தப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது என்றும் நாடாளுமன்றத்திலேயே அமைச்சர் தெளிவு செய்தும் ஒரு தமிழ் செய்திச் சானல் எரிவாயு மான்யத்தை ரத்து செய்து மத்திய அரசு ஏழை மக்களுக்கும் பெண்களுக்கும் துரோகம் இழைத்து விட்டதாகப் பேட்டி எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். :(

   Delete
  2. ரேஷன் முறையை எடுத்தாலே வெளிச்சந்தையில் பொருட்கள் விலை குறைய வாய்ப்பு உண்டு.

   Delete
 2. நல்லதொரு புதிய சிந்தனை பார்வை...

  இருந்தாலும் சாதாரண மக்களுக்கு இது புரியுமா அம்மா...?

  ReplyDelete
  Replies
  1. சாதாரண மக்களுக்குத் தானாகவே புரியவரும். அவர்களின் ரேஷன் ரத்தாகவில்லை எனத் தெரியவரும்போது புரிந்து கொள்வார்கள். ஆனால் ரேஷன் முறை தேவை இல்லை என்றே நான் சொல்லுவேன். இங்கே இலவசங்களாகக் கொடுத்துப் பழக்கி விட்டு விட்டார்கள். ஆகவே காசு கொடுத்து எதை வாங்கணும்னாலும் மக்களுக்கு அது கசக்கிறது. சில நாட்கள் முன்னர் வரை ஜிஎஸ்டி. பின்னர் "நீட்" தேர்வு. இப்போது அந்த இடத்தை "ரேஷன்" "எரிவாயு மானியம்" இரண்டும் பிடித்துக் கொண்டுள்ளது. அடுத்தது வரும் வரை இது தொடரும்!

   Delete
 3. எவ்வளவோ திட்டங்கள் மத்திய, மாநில அரசுகள் தீட்டுகின்றன...

  ஏழைக்கு என்ன கிடைக்கிறது ?
  இதுதான் எனக்கு புரியவேயில்லை.

  ReplyDelete
  Replies
  1. http://www.nisaptham.com/2017/08/blog-post.html?m=1

   Delete
  2. //கியாஸூக்கு மானியம் வழங்குவதில் தவறில்லை. ‘நானும் ஏழை’ என்று பொய் சொல்லித் தில்லாலங்கடித்தனம் செய்பவர்களைத் தடுத்தால் போதும். அதைத்தான் அரசாங்கம் செய்ய வேண்டும்.//

   இதைத் தான் முறைப்படுத்தப் போவதாக மத்திய அமைச்சர் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் கூறினார். நேரடி ஒளிபரப்பில் பார்த்தோம். இப்போதெல்லாம் எந்த ஒரு சின்ன விஷயத்தையும் பெரிது படுத்தி மோதி தான் செய்தார் எனச் சொல்வது மிக எளிது! அதுவும் தமிழ்நாட்டில் அது தான் விலை போகிறது! என்றாலும் உண்மை வெளிவரத் தான் செய்யும். அதே போல் பொது விநியோகமும் தொடரும் என மாநில உணவுத்துறை அமைச்சர் பேட்டியையும் ஒளிபரப்பினார்கள்.

   Delete
  3. என்றாலும் குறிப்பிட்ட சில தமிழ்ச்சானல்கள் எரிவாயு மான்யம் ரத்து என்றே பேசிக் கொண்டு செய்திகளையும், பேட்டிகளையும், அரசியல்வாதிகளின் கண்டனங்களையும் தொடர்ந்து காட்டிக் கொண்டு இருக்கின்றன. என்ன செய்ய முடியும்? :(

   Delete
  4. புதிதாக எரிவாயு இணைப்புப்பெற்றவர்களில் மானியத்துக்குத் தகுதிவாய்ந்தவர்களைக் கண்டறியும் ஆய்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றாலும் மானியம் ரத்து என்றாலும் அதன் விளைவை மக்கள் புரிந்து கொள்ளத் தான் வேண்டும். இப்போதைக்கு மானியம் ரத்தில்லை. இலவசங்களையே பெற்று வாழும் மக்களுக்குக் கையை விட்டுக் காசு செலவழிக்க வேண்டும் என்றால் கஷ்டமாக இருக்கிறது! :(

   Delete
 4. உங்கள் கண்ணோட்டம் நன்றாக உள்ளது. நடைமுறைக்கு உதவுமா .....கண்துடைப்பு ஆகாமல் இருந்தால் சரிதான்

  ReplyDelete
  Replies
  1. வாங்க பூவிழி. முதல் வருகை? கருத்துக்கு நன்றி. ரேஷன் விஷயத்திலும் எரிவாயு விஷயத்திலும் கண் துடைப்புச் செய்ய எந்த அரசும் முன் வராது! :)

   Delete
 5. எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்...பார்ப்போம்...

  கீதா: ஏழையாக அல்லது பணக்காரராக அல்லது நடுத்தரவர்கமாக இருந்துவிட்டால் கூடப் பரவாயில்லை....கொஞ்சம் நன்றாக சமாளிக்கும் தரத்தில் இருந்துவிட்டு வாழ்க்கை கீழே போகிறவர்களுக்கு (அவர்கள் தவறில்லாமல்)..திரிசங்கு நிலை... எங்கு எது விலை குறைவாக இருக்கிறது என்று தேடித் தேடிப் பார்த்து வாங்கும் நிலையில் - து பருப்பு ரூ 130 எங்கே? ரூ 30 எங்கே - மனம் ரூ 30 ல் கிடைப்பதைத்தானே வாங்க நினைக்கும்... இருக்கும்...சமாளிக்கணுமே. வருவாய் இருந்துவிட்டு திடீரென்று அந்த வருவாய் இல்லாமல் போனால்...இந்த ஏறு முகம் இறங்கு முகம் இருப்பவர்களுக்கு இவை எல்லாமே பூதாகாரமாகத்தான் தெரியும் என்றும் தோன்றுகிறது கீதாக்கா...

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம், வருவாய் இல்லை எனில் கஷ்டம் தான்! ஆனாலும் சமாளிக்கத்தான் வேண்டும். என்றாலும் இப்போது பருப்பு விலைகள் கொஞ்சம் குறைந்திருக்கின்றன.

   Delete
 6. எல்லாம் சீராக அமைந்து நன்மை விளைந்தால் நல்லதே...

  ப்ரைஸ் கன்ட்ரோல்...அதாவது ஒரு பொருளின் விலை இந்த விலைக்கு மேல் உயரக் கூடாது, இந்த விலைக்குக் கீழ் போகக் கூடாது என்பதையும் அரசு ஆராய்ந்து அதனையும் கொண்டு வர வேண்டும்..அதுவும் அந்த இடைவெளி மிகக் குறைவாக இருக்க வேண்டும்...ஏனென்றால் கீழ் விலைக்கும், மேல் விலைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள கேப் இருக்கிறதே..இங்கே. பல பொருட்களுக்கு எம் ஆர் பி இருந்தாலும் பல கடைகளில் தில்லு முல்லுக்கள் நடை பெறுகிறது. மக்களும் இதைக் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

  அதே போன்று பொருட்களின் தரம் குறித்தும் லா என்ஃபோர்ஸ்மென்ட் வர வேண்டும். உதாரணத்திற்கு. சென்னையில் எந்தக் கடைக்குப் போனாலும் கொத்தமல்லி விரை பச்சைக் கலர் கலந்த கொத்தமல்லி விரைதான் கலந்து கிடைக்கிறது. மேலாகப் பார்த்தால் அது தெரியாது. ஆனால் கூர்ந்து பார்த்தால் தான் தெரியும் கொத்தமல்லி உடைந்திருக்கும் பகுதியில் கூர்ந்து பார்த்தால் பச்சை நிறம் கலந்திருப்பது தெரியும். நான் பாரிஸ் கார்னர் சென்றிருந்த போது அங்கு வெளியிலேயே பச்சைக் கலந்த கொத்தமல்லி அப்படியே மூட்டை மூட்டையாக இருப்பதையும், ஒரு கடையில் வெளியில் அதை உலர்த்தி வைத்திருப்பதையும் பார்த்தேன்.

  அதற்கு முன் ஒரு முறை புது பாக்கெட் (அடையாறில் தரமான கடை என்ற ஒன்று) அதை உடைத்து நான் கொத்தமல்லி எடுத்து சாம்பார் பொடிக்குக் காய வைக்கும் போது பச்சை நிறம் கலந்ததை பார்த்ததும், உடன் அதில் ஒரு பிடி எடுத்து பாட்டிலில் தண்ணீர் விட்டு அதில் கொத்தமல்லி போட்டு வைத்ததும் ஒரு மணி நேரத்தில் தண்ணீர் பச்சை நிறமாக மாறியது. உடன் அதை அப்படியே எடுத்துக் கொண்டு அதே கடையில் கொடுத்து அவர்கள் பாரிஸ் கார்னரில் மொத்தவிலையில் வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும் என்று சொல்லி விட்டு பாக்கெட்டையும் கொடுத்து பைசா வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன். இதனைப் ஃபோட்டோவும் எடுத்து வைத்திருந்தேன். அதே கடையில் இப்போதும் அதே கலர் கலந்த கொத்தமல்லிதான் விற்கப்படுகிறது. அங்கு மட்டுமல்ல. 99% கடைகளில்.... பதிவாகப் போட வேண்டும் என்று நினைத்திருந்தேன்... பதிவாகப் போட்டேனா என்று நினைவில்லை..ஏனென்றால் போட நினைத்து நிறைய பெண்டிங்க் பதிவுகள் பாதியிலும், முக்காலுமாக இருக்கு ஹிஹிஹிஹிஹி.....அது போன்று பருப்புகள்...கடையில் வாங்கும் பருப்புகள் பேக்கெட் பருப்புகள் தான் அதில் மஞ்சள் கலர் கலக்கப்படுகிறது. இதுவும் அனுபவம் தான்..பாக்கெட்டுகளில் அல்லது உரித்து வைக்கப்படும் பச்சைப்பட்டாணி கலர் கலக்கப்பட்டே விற்கப்படுகிறது. (கலக்கப்படாமல் விற்கப்படுவதே இல்லை) பேக்கெட்டில் உள்ளவை ட்ரை பட்டாணி கூட சில கலர் கலக்கப்பட்டுத்தான் விற்கப்படுகின்றன....இப்படி நிறைய சொல்லலாம்..கீதாக்கா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பச்சைக்கலர் பச்சைப் பட்டாணி இப்போ இல்லை, எழுபதுகள், எண்பதுகளிலேயே திநகர், தாம்பரம் சந்தைகளில் விற்பார்கள். அதை வாங்கிச் சாப்பிடக் கூடாதுனு சொன்னாலும் கேட்காமல் எங்க வீட்டில் சிலர் வாங்குவாங்க! அம்பத்தூர் வந்ததும் அது இல்லையேனு ஏங்குவாங்க! நான் காய்ந்த பட்டாணி தான் வாங்கி ஊற வைக்கிறேன். கொத்துமல்லியும் நீங்க சொல்லும் பச்சைக்கலர் கொத்துமல்லி விதை கொஞ்சம் லேசான பச்சை நிறத்துடன் (ஒரிஜினல்) வட மாநிலங்களில் கிடைக்கும். காய்ந்த கொத்துமல்லி விதையும் கிடைக்கும். இங்கே காய்ந்தது மட்டும் கிடைக்கிறது. பெரிசாக ஒரு ரகம், சின்னக் கொத்துமல்லி விதை ஒரு ரகம். இரண்டு ரகங்களில் கிடைக்கிறது.

   Delete
 7. அதானே இதுக்குப் போய் அலட்டிக்கலாமா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, நன்றி ஐயா!

   Delete
 8. பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என....

  ReplyDelete
  Replies
  1. என்ன நடந்தாலும் மத்திய அரசைக் குற்றம் சொன்னால் கேட்பவர்கள் யார்? :)

   Delete
 9. இந்தச் செய்திகள் நானும் படித்தேன். உண்மையோ, பொய்யோ, நியாயமோ, இல்லையோ, இது சம்பந்தமாக வரும் மீம்ஸ் எல்லாம் ரசித்துச் சிரிக்கும்படியும் இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. தொலைக்காட்சியில் உணவுத்துறை அமைச்சர் பேட்டியே கொடுத்தார். அப்படியும் சில தமிழ்ச் செய்திகளில் ரேஷன் ரத்து என்றே சொன்னார்கள். நேற்றிரவு ஒரு செய்தியில் எரிவாயு மானியம் ரத்து என்றே சொல்கிறார்கள். நாடாளுமன்றத்தில் அமைச்சர் பேசுவதை முழுவதும் காட்டாமல் மானியம் ரத்து செய்யப்படும் எனச் சொல்கிறார் என்றே சொல்கிறார்கள். அதே பொதிகை தொலைக்காட்சியில் செய்தியின் போது அமைச்சர் பேசியதை ஒளிபரப்பினார்கள்.

   Delete